يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா. இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை (அந்த பெயர் உடையவரை) நாம் படைக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா ஆகும். இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை நாம் படைக்கவில்லை. (வேறு யாருக்கும் அந்த பெயரை நாம் சூட்டியதில்லை.)
Tamil Translation - Abdulhamid Baqawi7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.)