caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Maryam அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 44 · 19:21

قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُۥٓ ءَايَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا وَكَانَ أَمْرًا مَّقْضِيًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (ஜிப்ரயீல்) கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான்: “அது தனக்கு எளிதாகும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவும் (இவ்வாறு நடைபெறும்). இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான், “அது எனக்கு மிக எளிதா(ன காரியமா)கும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம் புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (இவ்வாறு நடைபெறும்). இன்னும், இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”
Tamil Translation - Abdulhamid Baqawi21. அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70