فَٱتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَآ إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு முன்னாலிருந்து ஒரு திரையை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அவரிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர் (-தூதர்)அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு முன்புறத்திலிருந்து ஒரு திரையை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். ஆக, அவளிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர், அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.