قَالَ مَا مَكَّنِّى فِيهِ رَبِّى خَيْرٌ فَأَعِينُونِى بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூறினார்: “என் இறைவன் எதில் எனக்கு ஆற்றல் அளித்துள்ளானோ அதுவே (போதுமானதும்) மிக்க மேலானது(ம் ஆகும்). ஆகவே, (உங்கள் உழைப்பு எனும்) வலிமையைக்கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் பலமான ஒரு தடுப்பை ஏற்படுத்துவேன்”
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “என் இறைவன் எதில் எனக்கு ஆற்றல் அளித்துள்ளானோ அதுவே (எனக்கு போதுமானதும்) மிக்க மேலானது(ம்) ஆகும். ஆகவே, (உங்கள் உழைப்பு எனும்) வலிமையைக்கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் பலமான ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi95. அதற்கவர், ‘‘என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது,) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக்கொண்டு எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை (சுவரை) எழுப்பிவிடுகிறேன்'' என்றும்,