caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 94

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:94

قَالُوا۟ يَٰذَا ٱلْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰٓ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (சைகையாக) “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்பவர்கள் எங்கள்) பூமியில் (நுழைந்து) விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் ஒரு தடையை ஏற்படுத்துவதற்காக (செலவாகும்) ஒரு தொகையை நாங்கள் உமக்கு ஆக்கட்டுமா?” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (சைகையால்) கூறினார்கள்: “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்பவர்கள் எங்கள்) பூமியில் (நுழைந்து) விஷமம் செய்கிறார்கள். ஆகவே, எங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் ஒரு தடையை நீர் ஏற்படுத்துவதற்காக ஒரு தொகையை நாங்கள் உமக்கு ஏற்படுத்தி கொடுக்கட்டுமா?”
Tamil Translation - Abdulhamid Baqawi94. அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா?'' என்று கேட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70