فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَآ ءَاتَيْنَٰهُ رَحْمَةً مِّنْ عِندِنَا وَعَلَّمْنَٰهُ مِن لَّدُنَّا عِلْمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவ்விருவரும் அங்கு வந்தபோது அவ்விடத்தில்) நம் அடியார்களில் ஓர் அடியாரை அவ்விருவரும் கண்டார்கள். நம்மிடமிருந்து அவருக்கு (சிறப்பான) கருணையை நாம் கொடுத்திருந்தோம். இன்னும் நம் புறத்திலிருந்து அவருக்கு ஞானத்தையும் நாம் கற்பித்திருந்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவ்விருவரும் (அங்கு வந்தபோது) நம் அடியார்களில் ஓர் அடியாரைக் கண்டார்கள். நம்மிடமிருந்து அவருக்கு (சிறப்பான) கருணையை நாம் கொடுத்திருந்தோம். இன்னும், நம் புறத்திலிருந்து அவருக்கு கல்வி ஞானத்தையும் நாம் கற்பித்திருந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நம் புறத்திலிருந்து (சிறப்பான) ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.