caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:56

وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَيُجَٰدِلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِٱلْبَٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ وَٱتَّخَذُوٓا۟ ءَايَٰتِى وَمَآ أُنذِرُوا۟ هُزُوًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவுமே தவிர தூதர்களை அனுப்பமாட்டோம். அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தை அழிப்பதற்காக நிராகரித்தவர்கள் அந்த அசத்தியத்தைக் கொண்டு வாதிடுகிறார்கள். இன்னும் என் வசனங்களையும் அவர்கள் எச்சரிக்கப்பட்டவற்றையும் கேலியாக எடுத்துக் கொண்டனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவுமே தவிர தூதர்களை நாம் அனுப்பமாட்டோம். மாறாக, அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தை அழிப்பதற்காக நிராகரித்தவர்கள் அ(ந்த அசத்தியத்)தைக் கொண்டு வாதிடுகிறார்கள். இன்னும், என் வசனங்களையும் அவர்கள் எதைக் கொண்டு எச்சரிக்கப்பட்டார்களோ அதையும் அவர்கள் கேலியாக எடுத்துக் கொண்டனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம் வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70