caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 55

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:55

وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤْمِنُوٓا۟ إِذْ جَآءَهُمُ ٱلْهُدَىٰ وَيَسْتَغْفِرُوا۟ رَبَّهُمْ إِلَّآ أَن تَأْتِيَهُمْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ ٱلْعَذَابُ قُبُلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களுக்கு நேர்வழி வந்தபோது (அதை ஏற்று) அவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதை விட்டு அவர்களைத் தடுக்கவில்லை. முன்னோரின் நடைமுறை அவர்களுக்கு வருவதை அல்லது கண்முன் (வெளிப்படையாக, திடீரென) வேதனை அவர்களுக்கு வருவதை (அவர்கள் எதிர்பார்த்தே) தவிர.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மக்களுக்கு நேர்வழி வந்தபோது (அதை ஏற்று) அவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதை விட்டும் அவர்களைத் தடுக்கவில்லை, முன்னோரின் நடைமுறை அவர்களுக்கு வருவதை; அல்லது, கண்முன் (வெளிப்படையாக, திடீரென) தண்டனை அவர்களுக்கு வருவதை (அவர்கள் எதிர்பார்ப்பதே) தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi55. மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன்சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம் வேதனை வரவேண்டும் என்பதற்காகத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70