وَكَانَ لَهُۥ ثَمَرٌ فَقَالَ لِصَٰحِبِهِۦ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَنَا۠ أَكْثَرُ مِنكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு (இவ்விரண்டிலிருந்து) கனிகள் (பலவும் இவை தவிர வேறு பல செல்வங்களும்) இருந்தன. அவனோ தன் தோழருக்கு -அவரிடம்- பேசியவனாக, நான் உன்னை விட செல்வத்தால் மிக அதிகமானவன், குடும்பத்தால் மிக கண்ணியமுள்ளவன் என்று கூறினான்.
Tamil Translation - Omar Sharifமேலும், அவனுக்கு (இவ்விரண்டிலிருந்தும்) கனிகள் (பலவும் இவை தவிர வேறு பல செல்வங்களும்) இருந்தன. ஆக, அவனோ தன் நண்பனை நோக்கி, - அவரிடம் பேசியவனாக – (அல்லாஹ்வை மறுக்கின்ற) நான் உன்னை விட செல்வத்தால் மிக அதிகமானவன், குடும்பத்தால் மிக கண்ணியமுள்ளவன் என்று கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. அவனிடத்தில் இன்னும் (பல) கனி (தரும் மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி ‘‘நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன், மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்'' என்று (கர்வத்துடன்) கூறினான்.