قُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا۟ لَهُۥ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَبْصِرْ بِهِۦ وَأَسْمِعْ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّ وَلَا يُشْرِكُ فِى حُكْمِهِۦٓ أَحَدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூறுவீராக! (இன்று வரை) அவர்கள் தங்கிய(மொத்த காலத்)தை அல்லாஹ் (ஒருவன்)தான் மிக அறிந்தவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ள மறைவானவை அவனுக்கே உரியன. அவன் துல்லியமாகப் பார்ப்பவன், இன்னும் துல்லியமாகக் கேட்பவன். அவர்களுக்கு அவனையன்றி பாதுகாவலன் ஒருவனும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் எவ(ர் ஒருவ)ரையும் கூட்டாக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! (இன்று வரை) அவர்கள் தங்கிய(மொத்த காலத்)தை அல்லாஹ் (ஒருவன்)தான் மிக அறிந்தவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ள மறைவானவை (-அவற்றைப் பற்றிய அறிவு) அவனுக்கே உரியன. அவன் துல்லியமாகப் பார்ப்பவன், இன்னும் துல்லியமாகக் கேட்பவன். அவர்களுக்கு அவனையன்றி பாதுகாவலன் ஒருவனும் இல்லை. இன்னும், அவன் தனது அதிகாரத்தில் எவ(ர் ஒருவ)ரையும் கூட்டாக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை.