إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَىٰٓ أَن يَهْدِيَنِ رَبِّى لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நாடினால் (என்று கூறியே) தவிர (எதையும் செய்வேன் என்று கூறாதீர்). நீர் மறந்து விட்டால் (பிறகு நினைவு வந்தவுடன்) உம் இறைவனை நினைவு கூருவீராக! இன்னும், என் இறைவன் இதைவிட (மிக சரியான) தெளிவான அறிவிற்கு மிக நெருக்கமானதன் பக்கம் எனக்கு அவன் நேர்வழி காட்டக்கூடும் என்று (ஆதரவுடன்) கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் நாடினால் தவிர (என்று). இன்னும், நீர் மறந்து விட்டால் (பிறகு நினைவு வந்தவுடன்) உம் இறைவனை நினைவு கூர்வீராக! இன்னும், என் இறைவன் இதைவிட மிக சரியான அறிவிற்கு மிக நெருக்கமானதன் பக்கம் எனக்கு அவன் நேர்வழி காட்டக்கூடும் என்று (அவன் மீது நம்பிக்கை வைத்து) கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi24. ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக.