قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, (முந்திய வேதங்களில் உள்ள சத்தியத்தை) பாதுகாக்கக்கூடியதாக (அந்த வேதத்தை அவன் இறக்கினான்). (அந்த வேதத்தை மறுப்பவர்களுக்கு) அவன் புறத்திலிருந்து கடுமையான வேதனையை அது எச்சரிப்பதற்காகவும் நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய கூலி உண்டு - என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (அதை இறக்கினான்).
Tamil Translation - Omar Sharifஅது (முரன்பாடுகள் அற்ற) நேரானதும் நீதமானதுமாகும். (நிராகரிப்பவர்களுக்கு) அவன் புறத்திலிருந்து கடுமையான தண்டனையை அது எச்சரிப்பதற்காகவும் நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய கூலி(யாகிய சொர்க்கம்) உண்டு - என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (அதை இறக்கினான்).
Tamil Translation - Abdulhamid Baqawi2. இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்).