هَٰٓؤُلَآءِ قَوْمُنَا ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً لَّوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَٰنٍۭ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version“இவர்கள் எங்கள் மக்கள். அவனையன்றி பல கடவுள்களை எடுத்துக் கொண்டனர். (அவற்றை அவர்கள் வணங்குவதற்கு) தெளிவான ஆதாரத்தை அவர்கள் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மகா தீயவன் யார்?”
Tamil Translation - Omar Sharif“எங்கள் சமுதாயமாகிய இவர்கள், அவனையன்றி பல கடவுள்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் விஷயத்தில் (அவை எல்லாம் கடவுள்கள்தான் என்பதை நிரூபிக்க) தெளிவான ஆதாரத்தை அவர்கள் கொண்டு வர வேண்டாமா? ஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மகா தீயவன் யார்?”
Tamil Translation - Abdulhamid Baqawi15. ‘‘நமது இந்த மக்கள் அவனைத் தவிர்த்து வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட மகா அநியாயக்காரன் யார்?'' (என்றார்கள்.)