قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَمَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًا صَٰلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدًۢا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) கூறுவீராக!: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், உங்கள் கடவுள் (நீங்கள் வணங்குவதற்கு தகுதியானவன்) எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவுவைப்பாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!”
Tamil Translation - Omar Sharif(நபியே) கூறுவீராக: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (-நீங்கள் வணங்குவதற்கு தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை பயப்படுவாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! இன்னும், தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!”
Tamil Translation - Abdulhamid Baqawi110. (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!''