قُل لَّوْ كَانَ ٱلْبَحْرُ مِدَادًا لِّكَلِمَٰتِ رَبِّى لَنَفِدَ ٱلْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّى وَلَوْ جِئْنَا بِمِثْلِهِۦ مَدَدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: என் இறைவனின் (ஞானத்தையும் அறிவையும் விவரிக்கும்) வாக்கியங்களுக்கு கடல் (நீர்) மையாக மாறினால், என் இறைவனின் வாக்கியங்கள் தீர்ந்துவிடுவதற்கு முன்னதாகவே கடல் (நீர்) தீர்ந்துவிடும். (இன்னும்) அதிகமாக அது போன்றதைக் கொண்டு வந்தாலும் (என் இறைவனின் வாக்கியங்கள் தீர்ந்து விடாது)!
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: என் இறைவனின் (ஞானத்தையும் அறிவையும் விவரிக்கும்) வாக்கியங்களுக்கு கடல் (நீர்) மையாக மாறினால், என் இறைவனின் வாக்கியங்கள் தீர்ந்துவிடுவதற்கு முன்னதாகவே கடல் (நீர்) தீர்ந்துவிடும். அது (-அந்த கடல் நீர்) போன்று அதிகம் அதிகமாக நாம் (மைகளை) கொண்டு வந்தாலும் சரியே!
Tamil Translation - Abdulhamid Baqawi109. (நபியே!) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் (மை) அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்ட போதிலும்கூட!