أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَّا رَيْبَ فِيهِ فَأَبَى ٱلظَّٰلِمُونَ إِلَّا كُفُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவர்கள் போன்றவர்களை படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அவர்களுக்கு ஒரு தவணையை அவன் ஆக்கினான். அதில் சந்தேகமே இல்லை. அக்கிரமக்காரர்கள் (இதை) நிராகரிப்பதைத் தவிர ஏற்க மறுத்தார்கள்!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவர்கள் போன்றவர்களை படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அவர்களுக்கு ஒரு தவணையை அவன் ஏற்படுத்தி இருக்கிறான். அதில் சந்தேகமே இல்லை. அக்கிரமக்காரர்கள் ஏற்காமல் நிராகரிக்கவே செய்தார்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi99. மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதை நிராகரிக்காமலில்லை!