أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِى ٱلسَّمَآءِ وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَٰبًا نَّقْرَؤُهُۥ قُلْ سُبْحَانَ رَبِّى هَلْ كُنتُ إِلَّا بَشَرًا رَّسُولًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது தங்கத்தில் ஒரு வீடு உமக்கு இருக்கும் (வரை) அல்லது வானத்தில் நீர் ஏறும் (வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்), (அப்படி நீர் ஏறிவிட்டாலும்) உமது ஏறுதலுக்காக (மட்டும்) நாம் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம், நாங்கள் படிக்கின்ற ஒரு வேதத்தை எங்கள் மீது நீர் இறக்கி வைக்கும் வரை. (நபியே) கூறுவீராக! “என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் ஒரு தூதரான மனிதராகவே தவிர (இறைத் தன்மை உடையவனாக) இருக்கின்றேனா? (அப்படி இல்லையே!)”
Tamil Translation - Omar Sharif“அல்லது, தங்கத்தினால் ஆன ஒரு வீடு உமக்கு இருக்கும் வரை; அல்லது, வானத்தில் நீர் ஏறும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்), (அப்படி நீர் ஏறிவிட்டாலும்) உமது ஏறுதலுக்காக (மட்டும்) நாம் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம், நாங்கள் படிக்கின்ற ஒரு வேதத்தை எங்கள் மீது நீர் இறக்கி வைக்கும் வரை. (நபியே) கூறுவீராக! “என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் ஒரு மனிதராக, தூதராக தவிர (இதெற்கெல்லாம் சுயமாக ஆற்றல் பெற்றவனாக) இருக்கின்றேனா?”
Tamil Translation - Abdulhamid Baqawi93. ‘‘அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உமக்கு ஆகும் வரை அல்லது வானத்தின் மீது நீர் ஏறுகின்ற வரை (நாம் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்). ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீர் இறக்கிவைக்காத வரை நீர் வானத்தில் ஏறியதையும் நாம் நம்பமாட்டோம்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?''