إِنَّ هَٰذَا ٱلْقُرْءَانَ يَهْدِى لِلَّتِى هِىَ أَقْوَمُ وَيُبَشِّرُ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இந்த குர்ஆன் மிகச் சரியானதின் பக்கம் நேர்வழி காட்டுகிறது; நன்மைகளை செய்யும் நம்பிக்கையாளர்களுக்கு “நிச்சயமாக அவர்களுக்கு பெரிய கூலி உண்டு” என்று நற்செய்தி கூறுகிறது;
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக இந்த குர்ஆன் மிகச் சரியான (-மிகவும் நேர்மையான, நீதமான, எல்லோருக்கும் பொருத்தமான) மார்க்கத்தின் பக்கம் நேர்வழி காட்டுகிறது. இன்னும், நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு, “நிச்சயமாக அவர்களுக்கு பெரிய கூலி உண்டு” என்று நற்செய்தி கூறுகிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi9. நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.