caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 83

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:83

وَإِذَآ أَنْعَمْنَا عَلَى ٱلْإِنسَٰنِ أَعْرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ كَانَ يَـُٔوسًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) புறக்கணிக்கின்றான்; (பாவங்கள் செய்து நம்மை விட்டு) தூரமாகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு அணுகினால் நிராசையுடையவனாக ஆகிவிடுகின்றான்.
Tamil Translation - Omar Sharifநாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) அவன் புறக்கணிக்கிறான்; இன்னும், (பாவங்கள் செய்து நம்மை விட்டு) தூரமாகி விடுகிறான். மேலும், அவனை தீங்குகள் அணுகினால் நிராசை அடைந்தவனாக (-இறைவனின் அருள் மீது நம்பிக்கை அற்றவனாக) ஆகிவிடுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi83. நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை ஒரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்து விடுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70