caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:80

وَقُل رَّبِّ أَدْخِلْنِى مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَٱجْعَل لِّى مِن لَّدُنكَ سُلْطَٰنًا نَّصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் இறைவா! என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில் இருந்து) என்னை வெளியேற்று! உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து!” என்று (நபியே!) கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) கூறுவீராக: “என் இறைவா! என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில்) இருந்து என்னை வெளியேற்று! உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து!”
Tamil Translation - Abdulhamid Baqawi80. அன்றி, ‘‘என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70