وَإِن كَادُوا۟ لَيَسْتَفِزُّونَكَ مِنَ ٱلْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَٰفَكَ إِلَّا قَلِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக அவர்கள் உம்மை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifமேலும், நிச்சயமாக (நபியே! உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக உம்மை அவர்கள் தூண்டி விட (உமக்கு தொந்தரவு தர) நெருங்கிவிட்டார்கள். (அப்படி அவர்கள் செய்திருந்தால்) அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi76. (நபியே! உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.