إِذًا لَّأَذَقْنَٰكَ ضِعْفَ ٱلْحَيَوٰةِ وَضِعْفَ ٱلْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅப்போது இவ்வாழ்கையில் இரட்டிப்பு தண்டனையையும் மரணத்திற்குப் பின் இரு மடங்கு தண்டனையையும் உம்மை சுவைக்க வைத்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவக்கூடியவரை காணமாட்டீர்.
Tamil Translation - Omar Sharif(அப்படி நீர் சாய்ந்திருந்தால்) அப்போது இவ்வாழ்கையில் இரு மடங்கு தண்டனையையும் மரணத்திற்குப் பின் இரு மடங்கு தண்டனையையும் நீர் சுவைக்கும்படி செய்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவரை காணமாட்டீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.