caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 67

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:67

وَإِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فِى ٱلْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّآ إِيَّاهُ فَلَمَّا نَجَّىٰكُمْ إِلَى ٱلْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ ٱلْإِنسَٰنُ كَفُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகடலில் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால், அவனைத் தவிர நீங்கள் பிரார்த்தித்தவை (அனைத்தும் உங்கள் எண்ணங்களை விட்டு) மறைந்து விடுகின்றன. அவன் உங்களை பாதுகாத்(து கரையில் சேர்ப்பித்)தபோது (அவனை) புறக்கணிக்கிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கடலில் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால், அவனைத் தவிர நீங்கள் பிரார்த்தித்தவை (அனைத்தும் உங்கள் எண்ணங்களை விட்டு) மறைந்து விடுகின்றன. அவன் உங்களை பாதுகாத்(து கரையில் சேர்ப்பித்)தபோது (அவனை) புறக்கணிக்கிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70