caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:44

تُسَبِّحُ لَهُ ٱلسَّمَٰوَٰتُ ٱلسَّبْعُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ وَإِن مِّن شَىْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِۦ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கின்றனர். அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், அவர்களின் துதியை (மனிதர்களே) நீங்கள் அறிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கிறார்கள். இன்னும், அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், (மனிதர்களே) அவர்களின் துதியை நீங்கள் அறிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, பெரும் மன்னிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70