caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 110

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:110

قُلِ ٱدْعُوا۟ ٱللَّهَ أَوِ ٱدْعُوا۟ ٱلرَّحْمَٰنَ أَيًّا مَّا تَدْعُوا۟ فَلَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَٱبْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (அவ்விரு பெயர்களில்) எதை (கூறி) நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு (இன்னும்) மிக அழகிய (பல) பெயர்கள் உள்ளன.” (நபியே!) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்! அதற்கிடையில் (மிதமான) ஒரு வழியைத் தேடுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது, ரஹ்மான் என்று அழையுங்கள்; (அவ்விரு பெயர்களில்) எதை (கூறி) நீங்கள் (அவனை) அழைத்தாலும் அவனுக்கு (இன்னும்) மிக அழகிய (பல) பெயர்கள் உள்ளன.” மேலும், (நபியே!) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர்! இன்னும், அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்! அதற்கிடையில் (மிதமான) ஒரு வழியைத் தேடுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi110. (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்தபோதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப்பெயர்கள் இருக்கின்றன.'' (நபியே!) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடிப்பீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70