وَقُلْنَا مِنۢ بَعْدِهِۦ لِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱسْكُنُوا۟ ٱلْأَرْضَ فَإِذَا جَآءَ وَعْدُ ٱلْـَٔاخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதன் பின்னர், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: நீங்கள் இப்பூமியில் வசியுங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக வரவைப்போம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இதன் பின்னர், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசியுங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக நாம் கொண்டு வருவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi104. இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்.