إِنَّهُۥ لَيْسَ لَهُۥ سُلْطَٰنٌ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவன் மீது (தவக்குல்) நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மீது அவனுக்கு (-ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்(து அவனை மட்டுமே சார்ந்த்)திருக்கிறார்களோ அவர்கள் மீது அவனுக்கு (-ஷைத்தானுக்கு) அதிகாரம் எதுவும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi99. எவர்கள் நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு ஓர் அதிகாரமும் இல்லை.