وَلَوْ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَآبَّةٍ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَإِذَا جَآءَ أَجَلُهُمْ لَا يَسْتَـْٔخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே விட்டிருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifமேலும், மக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். ஆக, அவர்களுடைய (இறுதி) தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.