لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ فَتَمَتَّعُوا۟ فَسَوْفَ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை நிராகரிப்பதற்காக(வே இவ்வாறு இணைவைக்கின்றனர்). ஆகவே “(இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். (மறுமையில்) நீங்கள் (உங்கள் தீய முடிவை) அறிவீர்கள்”.
Tamil Translation - Omar Sharifநாம் அவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு நன்றி மறுப்பதற்க்காகவே (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆகவே, (இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். நீங்கள் (உங்கள் தீய முடிவை மறுமையில்) அறிவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. நாம் அவர்களுக்குச் செய்த நன்றிகளையும் (நன்மைகளையும்) நிராகரித்து விடுகின்றனர். (ஆதலால், அவர்களை நோக்கி, ‘‘இவ்வுலகில்) சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் (மறுமையில்) நீங்கள் (உண்மையை) அறிந்து கொள்வீர்கள்'' (என்று நபியே! கூறுவீராக).