caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:41

وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ لَنُبَوِّئَنَّهُمْ فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَلَأَجْرُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் தாம் அநீதியிழைக்கப்பட்ட பின்பு அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊரை, நாட்டை) துறந்தார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)தை அமை(த்து தந்து அதில் வசிக்க வை)ப்போம். (அவர்களுக்குரிய) மறுமையின் கூலிதான் (இதைவிட) மிகப் பெரிது. (இதை மற்றவர்கள்) அறிந்திருக்க வேண்டுமே!
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்ட பின்பு அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊரை அல்லது தங்கள் நாட்டை) துறந்து சென்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)தை அமை(த்து கொடுத்து அதில் வசிக்க வை)ப்போம். (அவர்களுக்குரிய) மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரியது. (இதை எல்லோரும்) அறிந்திருக்க வேண்டுமே!
Tamil Translation - Abdulhamid Baqawi41. (நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70