لِيَحْمِلُوٓا۟ أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَمِنْ أَوْزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதன் காரணமாக, மறுமை நாளில் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமையாக (இவர்கள்) சுமப்பார்கள். இன்னும் இவர்கள் எவர்களை கல்வியின்றி வழிகெடுத்தார்களோ அவர்களின் (பாவச்)சுமைகளிலிருந்தும் (இவர்கள்) சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள் இவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.
Tamil Translation - Omar Sharifஇதன் காரணமாக, மறுமை நாளில் அவர்கள் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமையாக சுமப்பார்கள். இன்னும், எவர்களை கல்வியின்றி இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் (பாவச்) சுமைகளிலிருந்தும் சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமைகளை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமைகளையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?