caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:15

وَأَلْقَىٰ فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَٰرًا وَسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமி உங்களைக் கொண்டு அசையாதிருப்பதற்காக அதில் அவன் மலைகளை அமைத்தான். இன்னும் நதிகளையும் நீங்கள் (உங்கள் இலக்குகளுக்கு) வழி பெ(ற்)று (செல்)வதற்காக பாதைகளையும் (அமைத்தான்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், பூமியில் - அது உங்களை அசைத்துவிடாமல் இருப்பதற்காக மலைகளை ஊன்றினான். இன்னும், (உங்கள் நீர் தேவைகளுக்காக) நதிகளையும்; இன்னும், நீங்கள் (உங்கள் இலக்குகளை அடைய) சரியான வழியில் செல்வதற்காக பாதைகளையும் அவன் அமைத்(து கொடுத்)தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். (உங்கள் போக்குவரத்துக்காக) ஆறுகளையும் நேரான வழிகளை அறிவதற்காகப் பல பாதைகளையும் அமைத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70