caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 116

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:116

وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ ٱلْكَذِبَ هَٰذَا حَلَٰلٌ وَهَٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ إِنَّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ لَا يُفْلِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதற்காக உங்கள் நாவுகள் வருணிக்கும் பொய்யைக் குறித்து இது (ஹலால்) ஆகுமானது; இது (ஹராம்) ஆகாதது என்று கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifமேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதற்காக உங்கள் நாவுகள் வருணிக்கும் பொய்களின் பிரகாரம் “இது ஹலால் - ஆகுமானதாகும்; இது ஹராம் ஆகாததாகும்” என்று கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi116. உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70