لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் எதைக் கொண்டு சுகமளித்தோமோ அதன் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர் (அவற்றை ஆசைப்படாதீர்); அவர்கள் மீது கவலைப்படாதீர். நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (மென்மையாக பணிவுடன் இருப்பீராக!).
Tamil Translation - Omar Sharifஇவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் கொடுத்த சுகபோகங்கள் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர்! (அவற்றின் மீது ஆசைப்படாதீர்!) இன்னும், அவர்கள் மீது கவலைப்படாதீர். இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் மென்மையாக, பணிவுடன் நடப்பீராக!).
Tamil Translation - Abdulhamid Baqawi88. (பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக.