وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَٰبِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து) இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifமேலும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. (ஒருவருக்கு ஒருவர்மீது இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்.