فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நான் அவரை செம்மை செய்து, அவரி(ன் உடலி)ல் என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்” (என்று கட்டளையிட்டான்).
Tamil Translation - Omar Sharifஆக, “நான் அவரை செம்மைபடுத்தி, அவரி(ன் உடலி)ல் நான் படைத்த உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்!” (என்று வானத்தில் உள்ளோருக்கு நாம் கட்டளையிட்டோம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi29. ‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்.)