caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hijr அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 54 · 15:22

وَأَرْسَلْنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَسْقَيْنَٰكُمُوهُ وَمَآ أَنتُمْ لَهُۥ بِخَٰزِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்குப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை.
Tamil Translation - Omar Sharif(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். ஆக, அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்கு நீர் புகட்டுகிறோம். மேலும், அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை. (நாமே அதை உங்களுக்காக பூமியில் சேகரித்து வைக்கிறோம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi22. மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பிவைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழை நீரை மேகத்திலும், நிலத்திலும்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70