caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:17

يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأْتِيهِ ٱلْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை அவன் (அள்ளி) அள்ளிக் குடிப்பான். அதை இலகுவாக குடித்து விடமாட்டான். ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் (வேதனை) அவனுக்கு வரும். (அந்த வேதனையில்) அவன் இறந்து விடுபவனாக இல்லை. அவனுக்குப் பின்னால் (இன்னும் கடினமான) வேதனை (காத்திருக்கிறது).
Tamil Translation - Omar Sharifஅதை அவன் மிடறு மிடறாக குடிப்பான். அதை இலகுவாக அவன் குடித்து விடமாட்டான். மேலும், ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் அவனுக்கு வரும். ஆனால், அவன் இறந்து விடமாட்டான். இன்னும், அவனுக்கு முன்னால் (கடினமான) தண்டனை (அவனை காத்து கொண்டு) இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi17. அதை அவர்கள் (மிக சிரமத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக் கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையும் (அவர்களுக்கு) உண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70