وَلَنُسْكِنَنَّكُمُ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِهِمْ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِى وَخَافَ وَعِيدِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக குடி அமர்த்துவோம். இ(ந்த வாக்கான)து எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ இன்னும் என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்” (என்று அவர்களுடைய இறைவன் வஹ்யி அறிவித்தான்).
Tamil Translation - Omar Sharif“இன்னும், அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் வசிக்க செய்வோம். இ(ந்த வாக்கான)து, எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ; இன்னும், என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi14. ‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.