وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம் “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பிடவேண்டும்” என்று கூறினார்கள். ஆகவே, அவர்களுடைய இறைவன் “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு வஹ்யி அறிவித்தான்.
Tamil Translation - Omar Sharifமேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். ஆக, அவர்களுடைய இறைவன், “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு) வஹ்யி அறிவித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்'' என்றும்