قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டே தவிர ஓர் ஆதாரத்தை உங்களிடம் நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது; நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.”
Tamil Translation - Omar Sharifஅவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நாங்கள் இல்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது (தனது வஹ்யை இறக்கி) அருள் புரிகிறான். மேலும், அல்லாஹ்வுடைய அனுமதியினாலே தவிர உங்களிடம் ஓர் ஆதாரத்தை நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது. இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi11. அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) ஓர் ஆதாரத்தை நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை'' (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நம்பிக்கையாளர்கள் (அனைவரும்) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும்,