وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوٓءَ ٱلْحِسَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்த அறிவாளிகள்) அல்லாஹ் சேர்க்கப்பட வேண்டும் என ஏவிய (சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள்; தங்கள் இறைவனைப் பற்றி அச்சம் கொள்வார்கள்; கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள். இன்னும், அவர்கள், தங்கள் இறைவனை அஞ்சுவார்கள். மேலும், கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள்.