caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 18

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:18

لِلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمُ ٱلْحُسْنَىٰ وَٱلَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا۟ لَهُۥ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦٓ أُو۟لَٰٓئِكَ لَهُمْ سُوٓءُ ٱلْحِسَابِ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ وَبِئْسَ ٱلْمِهَادُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் இறைவனுக்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நன்மை உண்டு. அவனுக்குப் பதிலளிக்காதவர்களுக்கு பூமியிலுள்ளவை அனைத்தும் இன்னும் அதுபோன்றதும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை பிணை கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டு விட்டது.
Tamil Translation - Omar Sharifதங்கள் இறைவனு(டைய அழைப்பு)க்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நற்கூலி உண்டு. மேலும், எவர்கள் அவனு(டைய அழைப்பு)க்குப் பதிலளிக்கவில்லையோ அவர்களிடம் பூமியிலுள்ளவை அனைத்தும்; இன்னும், அதுபோன்றவையும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை மீட்புத்தொகையாக கொடுத்து தப்பித்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) மேலும், அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70