caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 1

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓمٓر تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ وَٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅலிஃப்; லாம்; மீம்; றா.[1] இவை வேதத்தின் வசனங்களாகும். (நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது உண்மைதான். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅலிஃப்; லாம்; மீம்; றா. இவை, (மகத்தான, ஞானமிக்க) வேதத்தின் வசனங்களாகும். (நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதுதான் (உறுதியான) உண்மையாகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. அலிஃப் லாம் மீம் றா. இவை இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும். (நபியே!) உமது இறைவனால் உமக்கு இறக்கப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) நம்புவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70