فَلَمَّا دَخَلُوا۟ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ٱدْخُلُوا۟ مِصْرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது அவர் தன்பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ் நாடினால்... நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் யூஸுஃபிடம் (அவரின் சபையில்) நுழைந்தபோது, அவர் தன் பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ்வின் நாட்டப்படி நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi99. (பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து) மிக மரியாதையுடன் வரவேற்று ‘‘(அல்லாஹ்வின் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்'' என்று கூறினார்.