caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 90

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:90

قَالُوٓا۟ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِى قَدْ مَنَّ ٱللَّهُ عَلَيْنَآ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக நீர்தான் யூஸுஃபா?” என்று கூறினர். “நான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் (அல்லாஹ்வை) அஞ்சி, (சோதனையில்) பொறு(த்திரு)ப்பாரோ,நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் யூஸுஃபா?” அவர் கூறினார்: “நான் யூஸுஃப்! இன்னும், இவர் என் சகோதரர். திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் அல்லாஹ்வை அஞ்சி நடப்பாரோ; இன்னும், (சோதனையில்) பொறுமையாக இருப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) நற்குண சீலர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi90. அதற்கவர்கள் (திடுக்கிட்டு) ‘‘மெய்யாகவே நீர் யூஸுஃபாக இருப்பீரோ?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70