فَلَمَّا دَخَلُوا۟ عَلَيْهِ قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا ٱلضُّرُّ وَجِئْنَا بِبِضَٰعَةٍ مُّزْجَىٰةٍ فَأَوْفِ لَنَا ٱلْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَآ إِنَّ ٱللَّهَ يَجْزِى ٱلْمُتَصَدِّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) நுழைந்து, “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்தோம். (அதை ஏற்று) எங்களுக்கு அளவையை முழுமைப்படுத்துவீராக! எங்கள் மீது தானம் புரிவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மசாலிகளுக்கு (நற்)கூலியளிப்பான்” என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் அவரிடம் நுழைந்தபோது கூறினார்கள்: “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே, (அதை ஏற்றுக் கொண்டு) எங்களுக்கு (தானியத்தின்) அளவையை முழுமைப்படுத்தி தருவீராக! இன்னும், எங்களுக்கு தர்மம் வழங்குவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்வோருக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi88. பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்.