يَٰبَنِىَّ ٱذْهَبُوا۟ فَتَحَسَّسُوا۟ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَا۟يْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَٰفِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் பிள்ளைகளே! செல்லுங்கள். யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடுங்கள். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்; நிச்சயமாக நிராகரிக்கின்ற மக்களைத் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif“என் பிள்ளைகளே! (பூமியின் பல பாகங்களில்) செல்லுங்கள்; இன்னும், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்கு தேடுங்கள். மேலும், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். நிச்சயமாக நிராகரிக்கின்ற மக்களைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi87. என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப்பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்'' என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.