وَكَذَٰلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكَ وَعَلَىٰٓ ءَالِ يَعْقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுப்பான். (கனவைப் பற்றிய) பேச்சுகளின் (முடிவான) விளக்கத்திலிருந்து உனக்குக் கற்பிப்பான். உம்மீதும், யஅகூபின் (மற்ற) கிளையார் மீதும் அவன்தன் அருளை முழுமையாக்குவான், முன்னர் உன் இரு பாட்டன்களான இப்ராஹீம், இஸ்ஹாக் மீது அதை முழுமைப்படுத்தியது போன்று. நிச்சயமாக உன் இறைவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Tamil Translation - Omar Sharif“இன்னும், இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுப்பான். இன்னும், (கனவைப் பற்றிய) பேச்சுகளின் (முடிவான) விளக்கத்திலிருந்து (அவன் நாடியதை) உனக்குக் கற்பிப்பான். உன் மீதும், யஅகூபின் (மற்ற) கிளையார் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்குவான், முன்னர் உன் இரு பாட்டன்களான இப்ராஹீம், இஸ்ஹாக் மீது அதை முழுமைப்படுத்தியது போன்று. நிச்சயமாக உன் இறைவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi6. மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்).