caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:56

وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَآءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَآءُ وَلَا نُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறே யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம் அவர் தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகின்றோம். நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
Tamil Translation - Omar Sharifஇவ்வாறே, யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம். அவர், தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகிறோம். இன்னும், நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70